விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 2 மே, 2022

சிந்தனை செய் தமிழா (14) கோயில்களில் கோலோச்சும் வடமொழி !

கோயில்கள் இருப்பது தமிழ் நாட்டில் ! கும்பிடும் தெய்வங்களின் பெயரோ சமற்கிருதத்தில் ! 

 -------------------------------------------------------------------------------------

தமிழக மக்களே ! நீங்கள் வணங்கும் தெய்வப் பெயர்களைப் பாருங்கள் ! எடுத்துக் காட்டுக்காக ஒரு சில :-

 -------------------------------------------------------------------------------------

சுயம்பீஸ்வர சுவாமி லோகநாயகி   [ நரசிங்கன் பேட்டை ]

ஜம்புஹேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி [ திருவானைக்கா ]

சிதம்பரேஸ்வரர் சிவகாமி அம்பாள் [ திருவிசைநல்லூர் ]

சித்தேஸ்வரர் சித்தாம்பிகை............[ திருச்சினம்பூண்டி ]

 

ராஜகோபாலசுவாமி செங்கமலவல்லி [ மன்னார்குடி ]

வீரட்டேஸ்வரர் ஞானாம்பிகை..............[ திருக்குறுக்கை ]

கும்பேஸ்வரர் மங்களாம்பிகை.............[ கும்பகோணம் ]

சிவானந்தேஸ்வரர் ஆனந்தவல்லி........[ திருக்கள்ளம் ]

 

அமிர்தகடேஸ்வரர் அபிராமி...................[ திருக்கடையூர் ]

ஸ்ரீதளிநாதர் சிவகாமி..............................[ திருப்பத்தூர் ]

வைத்தீஸ்வரன் தையல்நாயகி   [ வைத்தீஸ்வரன்கோயில்]

புஷ்பவனேஸ்வரர் சௌந்தராம்பிகை [திருப்பூந்துருத்தி]

 

சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மன்............[ மதுரை ]

மயூரநாதசுவாமி அபயாம்பிகை ........[ மயிலாடுதுறை ]

நேத்திரார்ப்பணேஸ்வரர் சுந்தரகுசாம்பிகை [ திருவீழிமிழலை ]

பவ ஔஷதீஸ்வரர் பிரஹந்நாயகி [ திருத்துறைப்பூண்டி]

 

வேதாரண்யேஸ்வரர் வேதநாயகி   [ திருமறைக்காடு ]

கோகர்ணேஸ்வரர் பிரஹந்நாயகி   [ புதுக்கோட்டை ]

காயாரோகணேஸ்வரர் - நீலாயதாட்சி [நாகப்பட்டினம்]

கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள்........... [மயிலாப்பூர்]


அர்த்தநாரீஸ்வரர் - பாகம்பிரியாள் [திருச்செங்கோடு]

தர்ப்பாரண்யேஸ்வரர்- பிராணேஸ்வரி [திருநள்ளார்]

சந்திரசூடேஸ்வரர் - மரகதாம்பாள்........ [ஓசூர்]

ராமநாதஸ்வாமி - பர்வதவர்த்தினி [இராமேஸ்வரம்]


ஜலகண்டேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி [வேலூர்]

ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி [ திருவானைக்கா]

பஞ்சநதீஸ்வரர் - தர்மசம்வர்த்தினி [திருவையாறு]

சோமநாதஸ்வாமி  - ஆனந்தவல்லி [மானாமதுரை]

 

இந்தத் தெய்வங்கள் உறையும் கோயில்கள் எல்லாம் எங்கு உள்ளன ? தமிழ்நாட்டில் ! இந்தத் தெய்வங்களை வழிபடும் மக்கள் எந்த நாட்டினர் ? தமிழ் நாட்டினர் !

 

இந்தத் தெய்வங்களுக்காக விழா எடுப்பவர்கள் யார் ? தமிழர்கள் ! இந்தக் கோயில்களை எடுத்துக் கட்டிக் குடமுழுக்கு செய்பவர்கள் யார் ? தமிழர்கள் ! இந்தத் தெய்வப் பெயர்கள் எல்லாம் எந்த மொழியில் உள்ளன ? சமற்கிருத மொழியில் !

 

இந்தக் கோயில்களில் எந்த மொழியில் பூசனை (அர்ச்சனை) செய்யப்படுகிறது ? சமற்கிருத மொழியில் ! சமற்கிருதத்தில் பூசனை (அர்ச்சனை)  செய்தால் தான் இந்தத் தெய்வங்களின் அருள் கிடைக்குமா ? (இந்த வினாவுக்கு எந்தத் தமிழனும் பதில் சொல்ல மாட்டான்.)

 

இந்தத் தெய்வங்களின் பெயர்களைச் சமற்கிருத்ததில் மாற்றியது யார் ? (இந்த வினாவுக்கும் எந்தத் தமிழனும் பதில் சொல்ல மாட்டான்.). தமிழ்நாட்டில் மக்களின் தாய் மொழி தமிழ்.  அவர்களது பேச்சு மொழி தமிழ். எழுத்து மொழி தமிழ். ஆட்சி மொழி தமிழ். தெய்வப் பெயர்கள் மட்டும் தமிழில் இருக்கக் கூடாதா ? தெய்வத்தின் அருள் வேண்டித் தொழுகின்ற மொழி தமிழில் இருக்கக் கூடாதா ?

 

தூங்காதே தம்பி தூங்காதே ! என்று பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் பாடியதற்குப் பொருள் புரியவில்லையா தமிழர்களே ! தூங்கித் தூங்கியே பலவற்றை இழந்தீர்கள் ! தமிழையும் இழந்து கொண்டு இருக்கிறீர்கள் !

 

கோயில்களில் தமிழ் இல்லை ! கோயில்களில் குடி கொண்டுள்ள தெய்வப் பெயர்களில் தமிழ் இல்லை ! நீதி மன்றங்களில் தமிழ் இல்லை ! நெடுந்தெரு அங்காடிப் பலகைகளில் தமிழ் இல்லை !

 

மழலையர் பள்ளிகளில் தமிழ் இல்லை ! இல்லங்களில் நிகழும் உரையாடலில்  தமிழ் இல்லை ! தமிழ் மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது ! தமிழையே மறந்து கொண்டிருக்கிறோம் !

 

தமிழை மதிக்கத் தவறும் தமிழர்களே ! தமிழனென்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா ! என்ற பாட்டினைப் பாடுவதற்கு உங்களுக்கு உரிமையில்லை !! தமிழன் என்ற உணர்வை இழந்து, உரிமைகளை இழந்து, அடையாளத்தையும் இழந்து, பொட்டுப் பூச்சியாய், புன்மைத் தேரையாய் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழனே !!

 

இனி நீ தமிழனென்று சொல்லாதே ! தலை நிமிர்ந்து நில்லாதே !

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 19]

{02-05-2022}

------------------------------------------------------------------------------------

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக