விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 7 ஜூன், 2022

சிந்தனை செய் தமிழா (37) ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை !

அரசியல்  ஆதாயம் கருதி, கைம்முதலை  இழக்கலாமோ ?

------------------------------------------------------------------------------------

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார் – (குறள்.463)

------------------------------------------------------------------------------------

எதிர்காலத்தில் பெறக் கூடிய ஆதாயங்களைக் கருதி, இப்போது கையிருப்பில் உள்ள முதலினை இழக்கக் கூடிய செயல்களை அறிவுடையார் மேற் கொள்ளமாட்டார் என்கிறார் திருவள்ளுவர் !

 

ஒரு நல்ல அரசுக்கு அழகு, மக்களுக்கு நீண்ட காலத்திற்கு நிலையான பயன் தரக் கூடிய உயர்பயன் திட்டங்களுக்கு முன்னுரிமை தந்து நிதி ஒதுக்கீடு செய்தல் வேண்டும் !

 

புதிய அணைகள் கட்டுதல், உயர் தரத்துடன் கூடிய சாலை வசதிகளை ஏற்படுத்துதல், ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் சீர்கெடாத பள்ளி / கல்லூரிக் கட்டடங்களைக் கட்டி கல்வி வளர்ச்சிக்கு உதவுதல், பாதுகாக்கப்பட்ட, நிலையான குடிநீர்த் திட்டங்களை உருவாக்குதல், வேளாண்மைக்குத் தேவையான நிலையான, தட்டுப்பாடில்லாத  நீர் வழங்கலை உறுதி செய்யும் நீர் மேலாண்மைத் திட்டங்கள் மேற்கொள்ளல், மழைப் பொழிவுக்கு அடிப்படைத் தேவையான வனவளத்தை 100 % விரிவு படுத்திப் பாதுகாத்தல் மற்றும் இன்னோரன்ன பயன்மிக்கத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் !

 

ஆனால் தமிழக மக்கள் இத்தகைய நல்வாய்ப்பைப் பெற்றிட வில்லை. 2018-19 –ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பாதீட்டின்படி (பாதீடு = BUDGET) அரசின் வருவாயில் 75,00,00,00,00,000 (75 ஆயிரம் கோடி) உருபா இலவசத் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. (இலவசம் என்றாலும் மானியம் என்றாலும் பொருள் ஒன்றே) இந்த 75 ஆயிரம் கோடி உருபாவை வைத்து சில  புதிய  அணைகளைக் கட்டலாம்; பழைய அணைகளைத் தூர் வாரலாம்; பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் கட்டலாம். இன்னும் எத்தனையோ பணிகளைச் செய்யலாம் !

 

மக்களிடம் வாக்குப் பறிப்புச் செய்யும் பாங்கிலேயே 75 ஆயிரம் கோடி உருபா இலவச / மானியத் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 75 ஆயிரம் கோடி உருபாவும் விழலுக்கு நீர் பாய்ச்சுகிறதே தவிர, பயிருக்கு நீர் பாய்ச்ச வில்லை. பாவம் தமிழக மக்கள் ! பாவம் தமிழ் நாடு !

 

------------------------------------------------------------------------------------

இலவச (மானிய)த் திட்டங்கள் தமிழகப் பாதீடு

 ( பட்ஜெட் 2019-20)

------------------------------------------------------------------------------------

 

மின்சார மானியம்................................= 10,492.00 கோடி

வேளாண்மை & இதர மின்

நுகர்வோர் மின் மானியம்................... = 08,118.25 கோடி

உணவு மானியம்...................................= 06,643.00 கோடி

உள்ளாட்சி சிறப்பு நிதியுதவித்

திட்ட மானியம்.......................................= 05,178.52 கோடி

நலிவடைந்தோர் பிரிவு சமூகப்

பாதுகாப்பு உதவி.................................= 03,958.00 கோடி

தொழிற்துறை முதலீட்டு

மானியம்...............................................= 02,500.00 கோடி

சத்துணவுத் திட்டம்................................= 01,772.00 கோடி

இலவசப் பாடப்புத்தகம்,குறிப்பேடு,

காலணி, புத்தகப்பை வழங்கல்..........= 01,658.90 கோடி

இடைநிற்றல் தடுப்பூக்கத் தொகை

வகுப்பு 10,11,12 க்கு.................................= 01,363.27 கோடி

முதலமைச்சர் விரிவான

காப்பீடு திட்டம் ....................................= 01,363.00 கோடி

முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு

உதவித் திட்டம்.........................................=   ,959.21 கோடி

மாணவர் இலவச பஸ் பாஸ்

மானியம்................................................= 00,766.00 கோடி

திருமண நிதியுதவித்

திட்டம்...................................................= 00,726,00 கோடி

பயிர் காப்பீட்டுத் திட்டம்......................= 00,621.59 கோடி

இலவச வேட்டி & சேலைத்

திட்டம்...................................................= 00,490.20 கோடி

முதல் தலைமுறை பட்டதாரி

கல்வி மானியம்...................................= 00,460.25 கோடி

டீசல் மானியம்....................................= 00,280.00 கோடி

போக்குவரத்துத் துறை

இலவச டீசல் மானியம்........................= 00,250.00 கோடி

மானிய விலை பாவை

ஊர்தித் திட்டம்.....................................= 00,250.00 கோடி

கரும்பு உற்பத்தி ஊக்கத்

தொகை.................................................= 00,200.00 கோடி

இலவச வெள்ளாடு/செம்மறி

ஆடு திட்ட மானியம்.............................= 00,198.75 கோடி

நெல் கொள்முதல்

ஊக்கத் தொகை...................................= 00,180.00 கோடி

மீனவர் மீன்பிடித்

தடைக் கால உதவி.................................= 00,170.13 கோடி

முதியோர், மாற்றுத் திறனாளி

விதவை உதவித் திட்டம்......................= 00,168.81 கோடி

பெண் மகவு பாதுகாப்புத்

திட்டம்...................................................= 00,140.00 கோடி

மானிய விலை நீர் ஏற்றம்

திட்டம்....................................................= 00,084.09 கோடி

இலவச கறவைப் பசு

மானியம்...............................................= 00,049.83 கோடி

கைத்தறி உதவித் திட்டம்.....................= 00,040.00 கோடி

---------------------------------------------------------------------------------

எல்லா மானியங்களும் சேர்த்து

மொத்தம்..............................................= ரூ 75,000 கோடி

---------------------------------------------------------------------------------

 


---------------------------------------------------------------------------------

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச  நான்கு சக்கர

ஊர்தி & துள்ளுந்து உதவியும் உண்டு.

---------------------------------------------------------------------------------

 

 ---------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 24]

{07-06-2022}

-----------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக